ரயில் முன் பாய்ந்து உயிரை மாய்த்த 15 வயது சிறுமி | Vellore
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே, 15 வயது சிறுமி ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.குடியாத்தம் அடுத்த கார்த்திகேயபுரம் பகுதியை சேர்ந்தவர் பிரத்தியங்கியா. 15 வயது சிறுமியான இவர், நடுப்பேட்டை பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். வழக்கம் போல் பள்ளி கிளம்பி சென்ற மாணவி, அன்று மாலை வீடு திரும்பாததால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், போலீசில் புகாரளித்து இரவு முழுவதும் தேடியுள்ளனர். இந்நிலையில், மேல்பட்டி ரயில் நிலையம் அருகேயுள்ள ரயில்வே தண்டவாளத்தில் மாணவி சடலமாக மீட்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரயில் முன் பாய்ந்து மாணவி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் இந்த சம்பவத்தில், மாணவியின் உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போலீசார், சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.