சாலையில் திடீரென விழுந்த 10 அடி பள்ளம் - ஓட்டுனர்கள் அதிர்ச்சி

x

பண்ருட்டி அருகே தேசிய நெடுஞ்சாலையில், சாலை உள்வாங்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடலூர் மாவட்டம் ஏ.கே குச்சிபாளையத்தில் மலடாற்றின் குறுக்கே, புதிதாக பாலம் கட்டப்பட்டது. இந்தநிலையில் பாலத்தை ஒட்டியுள்ள பகுதியில் சாலை உள்வாங்கியதில், சுமார் 10 அடி ஆழத்திற்கு பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், சாலையை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதன்காரணமாக, சென்னையிலிருந்து கும்பகோணம் செல்லும் அனைத்து வாகனங்களும், மாற்றுப்பாதையில் அனுப்பி வைக்கப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்