இரவு 9மணி தலைப்புச் செய்திகள் (28-05-2024) | 9PM Headlines | Thanthi TV | Today Headlines

x

பிரதமர் வருகை - பாதுகாப்பு ஒத்திகை

மூன்று நாள் பயணமாக, நாளை மறுநாள் தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி...

விவேகானந்தர் மண்டபத்தில் தியானத்தில் ஈடுபட உள்ளதாகத் தகவல்...

கன்னியாகுமரியில் இன்று பாதுகாப்பு ஒத்திகை...

கலைஞரின் கனவு இல்லம் தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகள் இன்று வெளியீடு...

ஒரு லட்சம் வீடுகள் கட்டுவதற்கான நிர்வாக அனுமதி வழங்கியது தமிழக அரசு...

சொந்த நிலத்தில் குடிசைகளில் வசிப்பவர்கள் மட்டுமே பயன்பெற முடியுமென தகவல்...

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக முக்கிய நிர்வாகிகளுடன் முதலமைச்சர் ஸ்டாலின் இன்று ஆலோசனை...

இந்தியா கூட்டணி தலைவர்கள் கூட்டத்தில் பேச வேண்டிய அம்சங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டதாக தகவல்...

ஜூன் 1ஆம் தேதி மாவட்ட செயலாளர்கள் மற்றும் நாடாளுமன்ற வேட்பாளர்கள் கூட்டம் நடைபெறுமென தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் இன்று அறிவிப்பு...


Next Story

மேலும் செய்திகள்