நாட்டின் 77-ஆவது சுதந்திர தினம்.. கோட்டை கொத்தளத்தில் கொடியேற்றும் முதல்வர்
நாட்டின் 77-வது சுதந்திர தினத்தை ஒட்டி, சென்னை கோட்டை கொத்தளத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தேசியக் கொடியேற்றி சுதந்திர
தின உரை நிகழ்த்தவுள்ளார்.
சுதந்திர தின விழாவில் பங்கேற்க வரும் முதலமைச்சர் ஸ்டாலினை, போர் நினைவுச் சின்னத்தில் இருந்து சென்னை மாநகர போலீஸார் இருசக்கர வாகனங்களில் அணிவகுத்து அழைத்து வருவா். கோட்டை கொத்தளத்தின் முன்பு வந்திறங்கும் அவருக்கு தலைமைச் செயலாளா் சிவ்தாஸ் மீனா பூங்கொத்து கொடுத்து வரவேற்பார். முப்படை அதிகாரிகளின் அறிமுகத்துக்குப் பிறகு, திறந்த ஜீப்பில் சென்று போலீஸாரின் அணிவகுப்பை பார்வையிடுவார். பின்னர், கோட்டை கொத்தளத்துக்கு வந்து தேசியக்கொடியை ஏற்றி வைத்து, சுதந்திர தின உரையை முதலமைச்சர் நிகழ்த்தவுள்ளார். அதில், சில முக்கிய அறிவிப்புகள் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விழாவில், தகைசால் தமிழா் விருது, ஏ.பி.ஜெ.அப்துல் கலாம் விருது, கல்பனா சாவ்லா விருது, முதலமைச்சரின் நல் ஆளுமை விருதுகள், மாநில இளைஞா்கள் விருதுகள் ஆகியவற்றை விருதாளா்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கவுள்ளார்.