70வயது மூதாட்டிக்கு வைத்த டார்கெட்..துடிக்க துடிக்க கழுத்தை நெரித்து கொன்ற பயங்கரம் | Tirupur

x

திருப்பூர், மண்ணரை பாரப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் மணியம்மாள். 70 வயதான இவர், கணவரை இழந்த நிலையில், தனியே வசித்து வந்திருக்கிறார். தனக்கு சொந்தமான மூன்று வீடுகளை மூதாட்டி வாடகைக்கு விட்டிருந்த நிலையில், அவரது வீட்டில் குடியிருந்து வந்த செந்தில்வேல் என்பவர் மூதாட்டியை நோட்டமிட்டு வந்திருக்கிறார். இந்நிலையில், தன்னுடைய நண்பர்கள் போத்திராஜன் மற்றும் சதீஷ் ஆகிய இருவரை சேர்த்துக் கொண்டு, மூதாட்டியின் வீட்டிற்குள் புகுந்த செந்தில்வேல், மூதாட்டியை கழுத்தை நெரித்து கொன்று 2 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் 3 கிராம் நகைகளை திருடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சிசிடிவி ஆதாரங்களின் அடிப்படையில், மூவரை பிடித்திருக்கும் போலீசார், அவர்களிடம் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்