6 இன்ஸ்பெக்டர்கள் டிரான்ஸ்பர்பறந்த உத்தரவு சென்னை கமிஷனர் அதிரடி
சென்னையில் 6 காவல் ஆய்வாளர்களை பணியிட மாற்றம் செய்து சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவிட்டுள்ளார். வண்ணாரப்பேட்டை குற்றப்பிரிவு ஆய்வாளராக பணிபுரிந்த தீபக் குமார் கொத்தால்சாவடி சட்டம் ஒழுங்கு ஆய்வாளராகவும், கோயம்பேடு காவல் ஆய்வாளராக இருந்த பிரவீன்குமார் புளியந்தோப்பு சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளராகவும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
செல்வகுமார், நுங்கம்பாக்கம் சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளராகவும், நுங்கம்பாக்கம் காவல் ஆய்வாளராக பணியாற்றி வந்த சேட்டு காவல் கட்டுப்பாட்டு அறைக்கும் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். திருவான்மியூர் சட்டம் ஒழுங்கு ஆய்வாளராக மணிவண்ணன் நியமிக்கப்பட்டுள்ள நிலையில்
திருவான்மியூர் ஆய்வாளராக இருந்த மீனாட்சி சுந்தரம் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
Next Story