சிக்கி தவித்த 6 அடி நாகப்பாம்பு - பிடிபட்டதும் கக்க வைத்த பாம்பு பிடி வீரர்
சென்னை ஆவடி அருகே மீன் வலையில் சிக்கி தவித்த 6 ஆடி நாகப் பாம்பு, பத்திரமாக மீட்கப்பட்டு அடர்ந்த வனப்பகுதியில் விடப்பட்டது. கொள்ளுமேடு கிராமத்தில் குட்டைகள் அமைத்து மீன் வளர்க்கப்படுகிறது. அங்கு வைக்கப்பட்டிருந்த வலையில், நாகப்பாம்பு சிக்கி வெளியேற முடியாமல் தவித்தது. இதையடுத்து, பாம்பு பிடி வீரர் ராஜேஷை வரவழைத்து, பாம்பு மீட்கப்பட்டது. அப்போது, பெரிய தவளையை பாம்பு விழுங்கியிருந்தது. அதனை லாவகமாக கக்க வைத்த ராஜேஷ், நாகப் பாம்பை அடர்ந்த வனப்பகுதியில் விட்டார்.
Next Story