இன்றைய தலைப்பு செய்திகள் (27-08-2023)

x

உ.பி. முதல்வர் யோகி... 'சன்'னாக இருந்து பதவிக்கு வந்தவர் இல்லை... சன்னியாசியாக இருந்து பதவிக்கு வந்தவர்... புதுச்சேரி ஆளுநர் தமிழிசை பேச்சு...

தமிழ்நாடு என்ற வீட்டுக்குள், அதிமுக பின்புலத்தோடு, பாஜக எனும் விஷப்பாம்பு நுழைய பார்க்கிறது...அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடும் விமர்சனம்...

சிறந்த தலைவர்கள் மாற்றத்திற்காக காத்திருக்க மாட்டார்கள்... மாற்றத்தை ஏற்படுத்துவார்கள் என ஆளுநர் ஆர்.என்.ரவி கருத்து...அதுபோன்ற தலைவர் தான் பிரதமர் ​மோடி எனவும் பேச்சு...

நாடு முழுவதும் மொத்தம் 50 பேர், நல்லாசிரியருக்கான தேசிய விருதுக்கு தேர்வு...வருகிற செப்டம்பர் 5ஆம் தேதி, ஆசிரியர் தினத்தன்று நல்லாசிரியர் விருதுகளை குடியரசு தலைவர் திரவுபதி முர்மு வழங்குகிறார்...

தமிழக அரசு பள்ளி ஆசிரியர்கள் 2 பேர், சிறந்த நல்லாசிரியர்களுக்கான தேசிய விருதுக்கு தேர்வு...மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த ஆசிரியர் காட்வின், தென்காசி மாவட்டத்தை சேர்ந்த ஆசிரியை மாலதி இருவரும் தேர்வு செய்யப்பட்டனர்...

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நள்ளிரவு 3 மணியளவில் கொட்டித் தீர்த்த கனமழை...அதிகாலை வரை மிதமான மழை நீடிப்பதால், குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது...

தமிழகத்தில் காவிரியின் எல்லையான பிலிகுண்டுலு பகுதிக்கு நீர் வரத்து 7 ஆயிரம் கன அடியாக சரிந்தது...தண்ணீரின் அளவு குறைந்ததால், ஒகேனக்கல்லில் 11 நாட்களுக்குப் பிறகு பரிசல்களை இயக்க அனுமதி...

காவிரியில் தண்ணீர் திறப்பதில், மேலாண்மை ஆணையம் தனது பணியை செய்யவில்லை...நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கருத்து...

திருவாரூர் வருகை தந்த முதலமைச்சர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு... பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார்...


Next Story

மேலும் செய்திகள்