இன்றைய தலைப்பு செய்திகள் (31-08-2023)
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வெளுத்து வாங்கிய மழை......பலத்த சூறாவளி காற்றுடன் பெய்த ஆலங்கட்டி மழை... வேரோடு சாய்ந்த மரங்கள்.....
காவிரி தொடர்பாக தமிழக அரசு வழக்கு தொடர்ந்துள்ள விவகாரம்....சட்ட வல்லுநர்களுடன் ஆலோசிக்க டெல்லி செல்கிறார் கர்நாடகா துணை முதல்வர் டி.கே.சிவகுமார்.....
கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து வினாடிக்கு ஏழாயிரத்து 329 கனஅடி நீர் திறப்பு.....தண்ணீர் திறக்குமாறு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்ட நிலையில், கர்நாடக அரசு நடவடிக்கை...
சென்னையில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளை ஆய்வு செய்தார் முதலமைச்சர் ஸ்டாலின்............வடகிழக்கு பருவமழை துவங்க உள்ள நிலையில், பணிகளை விரைந்து முடிக்க உத்தரவு
9 ஆண்டுகால மத்திய பாஜக ஆட்சியில், தமிழ்நாட்டிற்கு பத்தரை லட்சம் கோடி நிதியில் திட்டங்கள்....வெள்ளை அறிக்கை வெளியிட்ட அண்ணாமலை....
நாடாளுமன்ற தேர்தல் நெருங்குவதற்கான அறிகுறியே சிலிண்டர் விலை குறைப்பு என முதலமைச்சர் ஸ்டாலின் பேட்டி..................மத்திய அரசு, பெட்ரோல், டீசல் விலையை குறைத்தாலும் ஆச்சர்யம் இல்லை என்றும் கருத்து..............
கர்நாடகாவில் பெண்களுக்கு மாதம் தோறும் 2 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார் ராகுல் காந்தி.....மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்த பிறகு மக்கள் நல திட்டங்கள் தேசிய அளவில் அமல்படுத்தப்படும் என உறுதி....
தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் இந்திய கூட்டணியுடன் கூட்டணி அமைப்பது என்ற கேள்விக்கு இடமில்லை....நாடாளுமன்றத் தேர்தலில் தனித்தே போட்டி என பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி மீண்டும் திட்டவட்டம்....
மும்பையில் பாஜக கூட்டணி கட்சிகளும் இன்று ஆலோசனை.....எதிர்க்கட்சிகள் கூட்டத்தை தொடர்ந்து போட்டிக்கூட்டம்....
இந்தியா கூட்டணியின் லோகோ, நாளை வெளியாகிறது...இந்தியா கூட்டணியில் மேலும் சில கட்சிகள் இணைய வாய்ப்பு உள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் தகவல்....
மும்பையில் இன்று தொடங்குகிறது இந்தியா கூட்டணியின் 3-வது கூட்டம்...ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க இன்று மும்பை செல்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்....