5 மாநில சட்டமன்ற தேர்தல் - ஆக்சனில் இறங்கிய எலக்சன் கமிஷன்

x

மத்தியப்பிரதேச மாநிலத்தில் இன்று முதல் வரும் 6ஆம் தேதி வரை இந்திய தேர்தல் குழு ஆய்வு நடத்த உள்ளது. இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், தேர்தல் ஆணையர்கள் அனுப் சந்திர பாண்டே, அருண் கோயல் ஆகியோர் அடங்கிய குழுவினர் அந்த மாநிலத்தின் தலைநகர் போபாலுக்கு செல்கின்றனர். அங்கு மாநில தேர்தல் அதிகாரிகளுடன் சட்டமன்ற தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்த உள்ளனர். மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், தெலுங்கானா, மிசோரம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் விரைவில் நடத்தப்பட உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்