400 பவுன் நகை, ரூ. 56 லட்சம் - ஊரையே கதறவிட்ட பெண் | thoothukudi

x

தூத்துக்குடி அருகே நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களிடம், 56 லட்ச ரூபாய் பணம் மற்றும் 400 பவுன் நகைகளை மோசடி செய்த பெண்ணும், அவருக்கு உடந்தையாக இருந்த நபரும் கைது செய்யப்பட்டுள்ளனர். தூத்துக்குடி முத்தையாபுரம் பகுதியை சேர்ந்தவர் சுப்புலட்சுமி. இவர் அப்பகுதியிலுள்ள பெண்களிடம், தான் லயன்ஸ் கிளப்பில் நிர்வாகி ஆக உள்ளதாகவும், தொண்டு நிறுவனம் வைத்துள்ளதாகவும் கூறிய அறிமுகமாகியுள்ளார். பின்னர், தன்னிடம் 5 பவுன் தங்க நகைகளை கொடுத்தால், 2 சென்ட் நிலமும் ஒரு பவுன் தங்கமும் வழங்கப்படும் என ஆசை வார்த்தை கூறியுள்ளார். மேலும் ஒரு லட்ச ரூபாய் கொடுத்தால் ஒரே மாதத்தில், 10 ஆயிரம் சேர்த்து திருப்பி தரப்படும் எனவும் அவர் கூறியுள்ளார். இதனை நம்பி நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள், 56 லட்ச ரூபாய் பணம் மற்றும் 400 பவுன் நகைகளை சுப்புலட்சுமியிடம் அளித்துள்ளனர். அவற்றோடு அவர் தலைமறைவாகியுள்ளார். பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் பேரில் விசாரணை நடத்திய மாவட்ட குற்றப்பிரிவு போலீசார், சுப்புலட்சுமியையும், அவருக்கு உடந்தையாக இருந்த தனியார் நிதி நிறுவன மேலாளர் வேலவனையும் கைது செய்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்