36 மணி நேரம்.. அலசி எடுத்த ED.. சிக்கிய ஹார்டு டிஸ்க்.. கையோடு எடுத்து சென்ற அதிகாரிகள்
நாமக்கல் அருகே உள்ள அரசு மணல் சேமிப்பு கிடங்கில், அமலாக்கத்துறையினர் நடத்திய 36 மணி நேர சோதனை முடிவுக்கு வந்தது.
நாமக்கல் மாவட்டம் செவிட்டுரங்கன்பட்டியில், அரசு மணல் சேமிப்பு கிடங்கு அமைந்துள்ளது. இந்த சேமிப்பு கிடங்கில், நேற்று முன் தினம் காலை தொடங்கிய அமலாக்கத்துறை சோதனை, நேற்று இரவு 9 மணி வரை 36 மணி நேரம் நீடித்தது. சோதனையின்போது பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் சங்கீதாவிடமும், ஒப்பந்த ஊழியர் ஒருவரிடமும் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். மேலும் அப்போது பல்வேறு தகவல்கள், ஆவணங்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் சேகரித்ததாகவும், ரசீதுகளை ஆய்வு செய்ததாகவும் கூறப்படுகிறது. சேமிப்பு கிடங்கில் இருந்த கண்காணிப்பு கேமராக்களின் ஹார்ட் டிஸ்க்கை (HARD DISK), அமலாக்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றி சென்றதாகவும் கூறப்படுகிறது.
Next Story