ஆண்களுக்கு 3000 கிடாக்கள் பிரசாதம். திண்டுக்கல்லில் நடைபெற்ற விநோத திருவிழா
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே, விராலிப்பட்டி கோட்டை கருப்பணசாமி கோயிலில் 3 ஆயிரம் கிடாக்கள் பலியிடப்பட்டு விடியவிடிய பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது...
ஆடி கடைசி வெள்ளி இரவு திருவிழா கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். அதில் பெண்களுக்கு அனுமதி கிடையாது. நள்ளிரவு கோட்டை கருப்பண சாமிக்கு காவு கொடுக்கும் நிகழ்ச்சியில் காணிக்கையாக வழங்கப்பட்ட 3 ஆயிரம் கிடாக்கள் பலியிடப்பட்டன. அவை சமைக்கப்பட்டு, உடனடியாக ஆயிரக்கணக்கான ஆண் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டன. சூரியன் உதிப்பதற்கு முன், மீதமிருந்த கிடாக்கறி ஜேசிபி இயந்திரம் மூலம் பெரிய குழி தோண்டி புதைக்கப்பட்டது. விராலிப்பட்டியில் நடைபெற்ற விழாவுக்காக, வத்தலகுண்டில் இருந்து அரசு போக்குவரத்துக் கழகம் சிறப்பு பேருந்துகளை இரவு முழுவதும் இயக்கியது குறிப்பிடத்தக்கது.
Next Story