ஒரே நாளில் 300டன்..! தீபாவளிக்காக தீயாய் வேலை செய்யும் தொழிலாளர்கள்

x

சேலம் மாவட்டம் ஓமலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெல்லம் தயாரிக்கப்பட்டு, தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும், ஆந்திரா, கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும் விற்பனையாகிறது. திண்ணப்பட்டி, தீவட்டிப்பட்டி, காமலாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் நூற்றுக்கணக்கில் வெல்ல உற்பத்தி ஆலை இயங்கிவரும் நிலையில், நாளொன்றுக்கு 60 டன் வரையிலான வெல்லம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இதனிடையே தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 300 டன் அளவில் கூடுதல் வெல்லம் தயாரிக்கப்பட்டு வருவதாகவும், 30 கிலோ கொண்ட ஒரு சிப்பம் ஆயிரத்து 350 ரூபாய் வரை விற்கப்படுவதாகவும் உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்