3 குழந்தைக்கு தாய் திடீரென எடுத்த விபரீத முடிவு - வேலூரை உலுக்கிய சம்பவம்
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே மூன்று குழந்தைகளுக்கு தாயான இளம் பெண் ஒருவர், வீட்டிற்குள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குடியாத்தம் அடுத்த காளியம்மன்பட்டி சாமியார் மலையை சேர்ந்தவர் தினேஷ். இவருக்கு 24 வயதான மோனிஷா என்பவருடன் 6 வருடங்களுக்கு முன்பு திருமணமான நிலையில் மூன்று குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், குழந்தைகளுடன் தினேஷ் வெளியே சென்றிருந்த சமயம் பார்த்து, வீட்டில் தனியாக இருந்த மோனிஷா, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், பெண்ணின் உடலை கைப்பற்றி மருத்துவமனை கொண்டு சென்ற நிலையில், தற்கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story