வீட்டு வாடகை கேட்டதால் தகாத உறவுக்கு வந்த ஆத்திரம் - ஆசிரியை உட்பட 3 பேருக்கு விழுந்த வெட்டு
தருமபுரி மாவட்டம் அரூரில், பட்டப்பகலில் ஆசிரியை உட்பட 3 பெண்களை அரிவாளால் தாக்கிவிட்டு தப்பியோடிய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.அரூர் பெரியார் நகரைச் சேர்ந்த பேகம் என்பவரது வீட்டில், கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு ஷகிலா பானு என்பவர் வாடகைக்கு குடிபெயர்ந்துள்ளார். ஷகிலா பானு 3 மாதங்கள் மட்டுமே வாடகைப் பணம் தந்தை நிலையில், வீட்டை காலி செய்யாமல் இருந்து வந்ததாக சொல்லப்படுகிறது. இதனிடையே, வீட்டின் உரிமையாளர் பேகம் வாடகைப் பணம் கேட்டு ஷகிலா பானுவுடன் தகராறு செய்துள்ளார். அப்போது ஷகிலா பானுவுடன் தகாத உறவில் இருப்பதாக கூறப்படும் பாஷா என்பவர் அங்கு வந்து, வீட்டின் உரிமையாளர் பேகத்தை அரிவாளால் தாக்கியுள்ளார். அதனை தட்டிக் கேட்ட பக்கத்து வீட்டில் வசிக்கும் ஆசிரியை ஜெரின்தாஜ் மற்றும் மற்றொரு பெண்ணை அரிவாளால் தாக்கிய பாஷா, அங்கிருந்து தப்பியோடினார். காயமடைந்த 3 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், தப்பியோடிய பாஷாவை போலீசார் தேடி வருகின்றனர்.