மூக்கில் ரத்தம் வழிந்தபடியே இறந்து போன 3 மாத குழந்தை - வெளியான அதிர்ச்சி தகவல்
தடுப்பூசி செலுத்தப்பட்ட 3 மாத ஆண் குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது... திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த அய்யம் பாளையத்தைச் சேர்ந்த நூற்பாலை தொழிலாளியான கலிலன் - ஏஞ்சலினா தம்பதிக்கு சுஜன் என்ற 3 மாத ஆண் குழந்தை இருந்தது... முத்தாண்டி பாளையத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தில் சுஜனுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்ட நிலையில், இன்று காலை மூக்கில் ரத்தம் வழிந்தபடி குழந்தை மயங்கிக் கிடந்துள்ளது... உடனே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது, சுஜன் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தடுப்பூசி செலுத்தியதால் குழந்தை இறந்ததா அல்லது வேறு ஏதேனும் காரணமா என காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்...
Next Story