3 பசுமாடுகள் மர்மமான முறையில் மரணம்

x
  • தேனியில் மர்மமான முறையில் 3 பசுமாடுகள் இறந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜி.உசிலம்பட்டி கிராமத்தை சேர்ந்த செல்லக்கண்ணு சித்தார்பட்டிக்கு செல்லும் சாலையில் உள்ள தனது தோட்டத்து வீட்டில் 10க்கும் மேற்பட்ட பசு மாடுகளை வளர்த்து வருகிறார். இவர் கொட்டகையில் கட்டி வைத்திருந்த பசு மாடுகளில் 3 வாயில் நுரை தள்ளியபடி மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளன. உயிரிழந்த 3 பசுமாடுகளும் சினையாக இருந்தது குறிப்பிடத்தக்கது. மாடுகளின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி விவசாயி செல்லக்கண்ணு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மேலும் பசு மாடுகளின் உயிரிழப்புக்கான காரணம் குறித்து கண்டறிந்து தரும்படி கண்டமனூர் கால்நடை மருத்துவர்களிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்