கடலில் குளிக்கச் சென்ற 3 சிறுவர்கள் மாயம்..இரவு பகலாக தொடரும் தேடுதல் வேட்டை
திசையன்விளை அருகே, கடற்கரையில் குளிக்க சென்று மாயமான 3 பள்ளி மாணவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகின்றது. நெல்லை மாவட்டம் நவ்வலடி கடலில், அதே பகுதியைச் சேர்ந்த ஆகாஷ், முகேஷ், ராகுல் ஆகிய சிறுவர்கள் குளிக்கச் சென்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மாணவர்களின் உடைகள் கடற்கரையில் மீட்கப்பட்டதை அடுத்து, அவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதனிடையே, இவர்களுடன் பள்ளி இடைநின்ற மாணவனும் சென்றதாகவும், அலை அவர்களை இழுத்துச் சென்றபோது, இந்த சிறுவன் மட்டும் தப்பி வந்ததாகவும், விசாரணையில் தெரியவந்துள்ளது.
Next Story