இனி 24 மணி நேரமும்...- சென்னை மக்களுக்கு அடிச்ச லக்!
பெங்களூர் போன்று சென்னையிலும் வணிக வளாகம், பார், உணவகங்கள், கடைகள் என 24 மணி நேரமும் இயங்கும் வளாகம் துவங்கப்படுகிறது. சென்னை, தேனாம்பேட்டை மண்டலம், காதர் நவாஸ்கான் சாலையில் உலக வங்கியின் சென்னை நகர கூட்டமைப்பு திட்டத்தின் கீழ், 19 கோடியே 81 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நடைபாதை வளாகம் அமைக்கும் பணியை அமைச்சர் கே.என்.நேரு அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார். மேயர் பிரியா, ஆணையர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் உடன் இருந்தனர்... தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் நேரு, இந்த சாலை அடுத்த 18 மாதங்களில் பயன்பாட்டிற்கு வரும் என தெரிவித்தார். மேலும், மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் குறித்த கேள்விக்கும் பதிலளித்தார்.
Next Story