#BREAKING || ஒரே வாரத்தில் 23 குற்றவாளிகள்... சென்னை போலீஸ் அதிரடி வேட்டை | TN Police
ஆளு நர் மாளிகையில் பெட்ரோல் வெடிகுண்டு வீசிய கருக்கா வினோத், ஒன்றரை கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்ட ககன் போத்ரா உள்ளிட்ட 23 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
ஜனவரி மாதம் முதல் நவம்பர் மாதம் வரை 588 குற்றவாளிகள் குண்டர் தடுப்பு சட்டம் மற்றும் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்
இதில் 402 குற்றவாளிகள் கொலை, கொலை முயற்சி, பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல் உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்டவர்கள்.
74 பேர் கஞ்சா மற்றும் போதை பொருள் விற்பனையில் ஈடுபட்டவர்கள்
சைபர் குற்றத்தில் ஈடுபட்ட 4 பேர்
பாலியல் தொழிலில் ஈடுபட்டிருந்த 12 பேர்
தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் இருவர்
மேற்படி குற்றவாளிகளின் குற்றச் செயல்களை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட காவல் நிலைய ஆய்வாளர்கள் பரிந்துரை செய்ததின்பேரில், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சந்தீப் ராய் ரத்தோர், இ.கா.ப அவர்கள் ககன்போத்ரா, ரூபேஷ், சூர்யா, ஆனந்தன் (எ) கருப்பு ஆனந்த், பிரகாஷ், ராகேஷ் (எ) ராக்கி, நவீன் (எ) டியூக் நவீன், ஆனந்த், விஜய் (எ) லொட்டை விஜய் ஆகிய 9 நபர்களை கடந்த 09.11.2023 அன்றும்,
அருண், கலைவாணன், லெவியார் பென்னியமான், வினோத் (எ) கருக்கா வினோத், ரஞ்சித் (எ) கருவாடு ரஞ்சித் ஆகிய 5 நபர்களை கடந்த 10.11.2023 அன்றும்,
கார்த்திக் (எ) மொட்டை கார்த்திக், சரவணன் ஆகிய 2 நபர்களை கடந்த 11.11.2023 அன்றும், வேலு, பூபதிராஜன், கார்த்திக் ஆகிய 3 நபர்களை கடந்த 14.11.2023
பரத் (எ) பரத்ராஜ், சத்யா, இன்னாசி மோசஸ் (எ) மோசஸ் மதன் ஆகிய 4 நபர்களை 15.11.2923 அன்றும் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
அதன்பேரில், மேற்படி 23 குற்றவாளிகளும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
எனவே பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் நபர்கள், கொலை, கொலை முயற்சி, திருட்டு குற்றங்களில் ஈடுபடும் நபர்கள், கட்டப்பஞ்சாயத்து செய்து பணம் பறித்தல் மற்றும் போதை பொருட்களை பதுக்கி வைத்து விற்பவர்கள் உள்பட சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் நபர்களை தொடர்ந்து கண்காணித்து உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை பெருநகர காவல்துறை சார்பாக தெரிவிக்கப்படுகிறது.