25 ஏக்கர் நிலத்தில் முள்வேலி.. உடைத்து வீசிய 22 பேர் - கன்னியாகுமரியில் பரபரப்பு

x

கன்னியாகுமரியில், 25 ஏக்கர் நிலத்தில் போடப்பட்ட முள்வேலியை சட்டவிரோதமாக அப்புறப்படுத்திய 22 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டம் குமாரபுரம் அருகே கரும்பாறை பகுதியை சேர்ந்த மினுமஞ்சரிக்கு, அதே பகுதியில் 25 ஏக்கரில் ரப்பர் தோட்டம் உள்ளது. அங்கு அமைக்கப்பட்ட முள்வேலியை கடந்த சில தினங்களுக்கு முன் அதே பகுதியை சேர்ந்த வின்சென்ட்ராஜ் உள்பட 5 பேர் சேர்ந்து அப்புறப்படுத்தியதாக, மினுமஞ்சரி புகார் அளித்தார். இதன்பேரில் கொற்றிக்கோடு போலீசார், வின்சென்ட்ராஜ் உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில், ரப்பர் தோட்டத்தில் அமைக்கப்பட்ட முள்வேலியை வின்சென்ட் ராஜ் உள்ளிட்ட 22 பேர் சேர்ந்து, சட்டவிரேதமாக அப்புறப்படுத்தி உள்ளனர். இதன்பேரில் 22 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிந்து, தலைமறைவான நபர்களைத் தேடி வருகின்றனர். முள்வேலியை அப்புறப்படுத்திய சி.சி.டி.வி. காட்சிகள் வெளியாகியுள்ளன.


Next Story

மேலும் செய்திகள்