பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து பெரும் விபத்து - புனித யாத்திரை சென்ற பக்தர்கள் உயிரிழப்பு

பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து பெரும் விபத்து - புனித யாத்திரை சென்ற பக்தர்கள் உயிரிழப்பு
x

உத்தரகாண்டில் பக்தர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று, பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 22ஆக உயர்ந்துள்ளது.


மத்தியப் பிரதேச மாநிலம் பன்னா மாவட்டத்தை சேர்ந்த 28 பேர், உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள சார்தாம் புனித யாத்திரைக்கு பேருந்தில் சென்றனர். உத்தர்காசி மாவட்டம் டாம்டா அருகே சென்ற போது பேருந்து பள்ளத்தாக்கில் கவிந்து விபத்துக்குள்ளானது. இதில்,22 பேர் உயிரிழந்துள்ளனர். 6 பேர் படுகாயங்களுடன் மீட்ட மீட்புப் படையினர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதனிடையே இறந்தவர்களின் குடும்பத்திற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். பிரதமரின் நிவாரண நிதியில் இருந்து இறந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 2 லட்சம் ரூபாயும், காயமடைந்தோரின் குடும்பத்திற்கு தலா 50 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும் என அவர் அறிவித்துள்ளார். இதே போன்று, உள்துறை அமைச்சர் அமித்ஷா, உத்தரகாண்ட், மத்திய பிரதேச முதல்வர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்