"பொழுதுபோக்கு மதுபான கிளப்களில் வரி வசூலிப்பதற்கு தடை " - நீதிமன்றம் அதிரடி உத்தரவு

பொழுதுபோக்கு மதுபான கிளப்களில் வணிகவரித்துறை வரி வசூலிப்பதற்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
x
பொழுதுபோக்கு மதுபான கிளப்களில் வணிகவரித்துறை வரி வசூலிப்பதற்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. விருதுநகர் மாவட்ட வருவாய்த்துறை துணை ஆணையர் அனுப்பிய நோட்டீஸை எதிர்த்து, சிவகாசியைச் சேர்ந்த செல்வராஜ் வழக்கு தொடர்ந்தார். அதில் பொழுதுபோக்கு மதுபான கிளப்பிற்கும், உறுப்பினர்களுக்கும் இடையேயான பண பரிவர்த்தனை TNVAT விதிகளின் கீழ், வரி வசூலுக்கு அப்பாற்பட்டது என கூறப்பட்டிருந்தது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஸ்ரீமதி உச்சநீதிமன்ற உத்தரவை சுட்டிக்காட்டி, வணிக வரிகத்துறையினர் அனுப்பிய நோட்டீஸுக்கு தடை விதித்தார்

Next Story

மேலும் செய்திகள்