தமிழில் தேர்வு நடக்குமா..? - இஸ்ரோ பதில்
விண்வெளித் துறையில் உள்ள பிரிவு "பி" மற்றும் "சி" பதவிகளுக்கான தேர்வுகளை மாநில மொழிகளில் நடத்த பரிசீலிப்பதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
தமிழில் தேர்வு நடக்குமா..? - இஸ்ரோ பதில்
விண்வெளித் துறையில் உள்ள பிரிவு "பி" மற்றும் "சி" பதவிகளுக்கான தேர்வுகளை மாநில மொழிகளில் நடத்த பரிசீலிப்பதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் இயங்கி வரும் விண்வெளி ஆராய்ச்சி உந்தும வளாகம் இரண்டு பணி நியமன அறிவிக்கைகளை வெளியிட்டு சென்னை மற்றும் நாகர்கோவிலில் எழுத்துத் தேர்வை அண்மையில் நடத்தியது.
இந்தத் தேர்வுகள் ஆங்கிலம் மற்றம் இந்தியில் நடந்த நிலையில், தமிழிலும் தேர்வுகளை நடத்த வேண்டும் என விண்வெளி ஆராய்ச்சி உந்தும வளாக இயக்குனருக்கு கடந்த 20ம் தேதி மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் கடிதம் எழுதியிருந்தார்.
பிட்டர் மற்றும் வெல்டர் உள்ளிட்ட பதவிகளுக்கான தேர்வை, தமிழ்வழிக் கல்வியில் ஐடிஐ பட்டயப்படிப்பு முடித்தவர்களும், ஒடுக்கப்பட்ட சமூகங்களை சார்ந்தவர்களுமே அதிகம் எழுதுவதாகக் குறிப்பிட்டிருந்தார்.
எனவே தமிழ் வடிவக் கேள்வித்தாளுடன் மறு தேர்வை நடத்த வேண்டுமென கூறியிருந்தார்.
இதற்கு பதிலளித்த அந்நிறுவனத்தின் இயக்குநர் அழகுவேலு, விண்வெளித் துறைக்கு பிரிவு "பி" மற்றும் "சி" பதவிகளுக்கான தேர்வுகளை, மாநில மொழிகளிலும் எதிர்கால நியமனங்களில் நடத்த வழிகாட்டல் கேட்டு எழுதுவதாக பதிலளித்துள்ளார்.
Next Story