ஆரம்பமாகிறது அக்னி நட்சத்திரம்... காய்ச்சி எடுக்கப்போகும் வெயில் - வெளியான அதிர்ச்சி தகவல்

தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் என்று அழைக்கப்படும் கத்திரி வெயில் இன்று தொடங்கும் நிலையில், அதிகபட்ச வெப்ப நிலை இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
x
தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் என்று அழைக்கப்படும் கத்திரி வெயில் இன்று தொடங்கும் நிலையில், அதிகபட்ச வெப்ப நிலை இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு இடங்களில் வெயில் 100 டிகிரிக்கும் மேல் பதிவாகி பொதுமக்களை வாட்டி வதைத்து வருகிறது. அதன்படி, நேற்று அதிகபட்சமாக வேலூரில் வெப்பம் 105 டிகிரி பாரன்ஹீட்டாகவும், திருத்தணி மற்றும் திருச்சியில்104 டிகிரியாகவும் வெப்பநிலை பதிவானது. மேலும், மதுரை விமான நிலையத்தில் 103 டிகிரியாகவும், ஈரோடு, கரூர் பரமத்தி, தஞ்சை ஆகிய பகுதிகளில்102 டிகிரி பாரன்ஹீட்டாகவும் வெப்பம் பதிவானது. இந்நிலையில், கத்திரி வெயில் இன்று தொடங்கும் நிலையில், தமிழகத்தில் அதிகபட்ச வெப்ப நிலை இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்