பெற்றோர் பைக் வாங்கி தராததால் விபரீத முடிவு - கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை
செங்கல்பட்டு அருகே இருசக்கர வாகனம் வாங்கி தராததால் கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு அருகே இருசக்கர வாகனம் வாங்கி தராததால் கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிங்கப்பெருமாள் கோவிலை சேர்ந்த நாகராஜ், பாலிடெக்னிக் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இவர் புதிதாக பைக் கேட்டதாகவும், குடும்ப சூழ்நிலையால் பெற்றோர் மறுத்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த நாகராஜ், வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து, உடலைக் கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story