நடிகர் விமல் மீது தயாரிப்பாளர் புகார்

நடிகர் விமல் மீது தயாரிப்பாளர் புகார்
x
நடிகர் விமல், ஒன்றரை  கோடி ரூபாய் பணத்தை தராமல் ஏமாற்றி வருவதாக தயாரிப்பாளர் சிங்காரவேலன் தெரிவித்துள்ளார். 
இதுதொடர்பாக, காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தபின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நடிகர் விமல், தம்மிடம் 5 கோடி ரூபாய் வாங்கியதாகவும், பின்னர், மேலும் ஒன்றரை கோடி ரூபாய் வாங்கியதாகவும் தெரிவித்தார். பணத்தை திருப்பிக் கேட்டபோது, நடிகர் விமல் அளித்த  2 கோடியே 70 லட்சம் ரூபாய்க்கான காசோலை, வங்கியில் பணம் இல்லாமல் திரும்பி வந்ததாகவும் அவர் தெரிவித்தார். இந்த விவகாரத்தை திசை திருப்பவே, தம்மீது அவர் பொய் புகார் அளித்துள்ளதாக சிங்காரவேலன் குற்றம்சாட்டினார்

Next Story

மேலும் செய்திகள்