அதிகரிக்கும் கொரோனா - விமான நிலையங்களில் முகக்கவசம் கட்டாயம் - வெளியானது அறிவிப்பு
தமிழகத்தில் கொரோனா தொற்று வெகுவாக குறைந்து 30 க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் கொரோனா தினசரி பாதிப்பு பூஜியம் என்ற நிலை ஏற்பட்டு உள்ளது.
அதிகரிக்கும் கொரோனா - விமான நிலையங்களில் முகக்கவசம் கட்டாயம் - வெளியானது அறிவிப்பு
தமிழகத்தில் கொரோனா தொற்று வெகுவாக குறைந்து 30 க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் கொரோனா தினசரி பாதிப்பு பூஜியம் என்ற நிலை ஏற்பட்டு உள்ளது. அதை போல் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைப் பெருகிறவா்களும் வெகுவாக குறைந்து விட்டது. பல்வேறு மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளே இல்லை. மேலும் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக தமிழகத்தில் கொரோனா உயிரிழப்புகளே இல்லை.
கொரோனா பாதிப்பு கட்டுப்படுத்தப்பட்டதால தமிழ்நாடு அரசு கொரோனா பாதுகாப்பு விதிமுறைகள் தளர்த்தி உள்ளது. இரண்டு ஆண்டுகளாக கட்டாயமாக மாஸ்க் அணிய வேண்டும் என்ற உத்தரவு கடந்த ஒரு மாதமாக தளர்த்தப்பட்டு மாஸ்க் அணியாவிட்டால் அபராதம் விதிக்கப்படாதது என அரசு அறிவித்தது.
இதையடுத்து தமிழகம் முழுவதிலும் மாஸ்க் அணிபவா்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து விட்டது. மாஸ்க் அணிபவா்களின் எண்ணிக்கை விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் ஒரு சிலர் மட்டுமே மாஸ்க் அணிகின்றனர்.
இந்த நிலையில் வேகமாக குறைந்து வந்த கொரோனா தொற்று தற்போது பல்வேறு நாடுகளில் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. இந்தியாவில் டெல்லி உள்ளிட்ட சில மாநிலங்களில் தொற்று தாக்கம் அதிகமாக உள்ளது. நீண்ட நாட்களுக்கு பின் சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் கொரோனா பாதிப்பு நோயாளிகள் எண்ணிக்கை 4 ஆக பதிவாகி உள்ளது.
இதையடுத்து சென்னை விமான நிலையத்தில் கடந்த காலத்தை போல் கண்டிப்பாக அல்லாமல் அன்போடு அனைவரும் மாஸ்க் அணிந்து கொண்டு வரவேண்டும் என்று வலியுறுத்துகின்றனா். விமான பயணிகள் போர்டிங் பாஸ் வாங்கும் கவுண்டரில் மாஸ்க் அணிந்து இருந்தால் மட்டுமே போர்டிங் பாஸ் கொடுக்கின்றனர். அணியாதவர்களை ஏன் அணிய வில்லை? என்று கேட்டு மாஸ்க் அணிய கூறுகின்றனா்.
இதேபோல் சென்னை விமான நிலையத்தில் போா்டிங் பாஸ் வாங்கும் இடம் என்றில்லாமல், அனைத்து பிரிவுகளிலும் பயணிகளை மாஸ்க் அணிந்து வர வற்புறுத்துகின்றனர். பயணிகள் மட்டுமல்லாது பார்வையாளர்கள், விமான நிலைய ஊழியர்கள், பாதுகாவலர்கள் மற்றும் விமான நிலையத்தில் பல்வேறு பிரிவுகளில் பணியாற்றுபவா்கள் உட்பட அனைத்து பிரிவினரையும் மாஸ்க் அணியும்படி வலியுறுத்துகின்றனர்.
சென்னை விமான நிலையத்தில் மாஸ்க் அணிவதை இந்த அளவு கட்டாயப்படுத்துவதற்கு என்ன காரணம் என்று விசாரித்தபோதுஅதிகாரிகள் கூறியதாவது;
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் கொரோனா தொற்று இந்தியாவில் பாதிப்பை ஏற்படுத்தியது. அத் போன்ற ஒரு நிலை மீண்டும் ஏற்படக் கூடாது என்பதற்காக தான் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்தந்த ஏா்லைன்ஸ் நிறுவனங்கள் பயணிகள் மற்றும் ஊழியர்கள், பாதுகாவலர்கள் அனைவரையும் மாஸ்க் அணியும் படி வற்புறுத்துகின்றனர்.
இந்த மாஸ்க் அணியும் முறை மேலும் இரண்டு மாதம் நீடிக்கும் என்று அதிகாரிகள் கூறுகின்றனா்.
Next Story