"என் சாவுக்கு காரணம் அந்த 2 பேரு தான்"... மனைவிக்கு வீடியோ அனுப்பிவிட்டு இன்ஜினியர் தற்கொலை!

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தில் சாப்ட்வேர் பொறியாளர் ஒருவர் வீடியோ பேசி வெளியிட்டு ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டம் பாப்பான்குளம் அருகே உள்ள அணைந்தபெருமாள் நாட
x
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தில் சாப்ட்வேர் பொறியாளர் ஒருவர் வீடியோ பேசி வெளியிட்டு ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டம் பாப்பான்குளம் அருகே உள்ள அணைந்தபெருமாள் நாடனூர் கிராமத்தை சேர்ந்த சுரேஷ் என்பவர் சாப்ட்வேர் பொறியாளர் ஆவார். இவர் சுதா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். அவர்களுக்கு இரண்டரை வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது. சென்னையில் பணிபுரிந்து வந்த சுரேஷ், திருமணம் ஆனவுடன் பாவூர்சத்திரம் அருகே உள்ள செல்வ விநாயகர்புரத்தில் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சுரேஷ் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். முன்னதாக தனது மனைவிக்கு அவர் செல்போனில் பேசி அனுப்பியுள்ள வீடியோவில் தனது சாவுக்கு சென்னையை சேர்ந்த இருவர்தான் காரணம் என்றும் , கடந்த இரண்டரை வருடங்களாக தொழில் முறையிலான நெருக்கடிகள் கொடுத்ததால் மனமுடைந்து இந்த முடிவை மேற்கொண்டதாகவும் சுரேஷ் தெரிவித்துள்ளார். அவரது துண்டான உடலை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்