கொரோனா மரணங்கள் - மறைக்கிறதா இந்தியா?
இதுவரை பதிவான கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கையை பகிரங்கப்படுத்த இந்தியா மறுப்பதாக எழுத்துள்ள புதிய குற்றச்சாட்டு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா மரணங்கள் - மறைக்கிறதா இந்தியா?
இதுவரை பதிவான கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கையை பகிரங்கப்படுத்த இந்தியா மறுப்பதாக எழுத்துள்ள புதிய குற்றச்சாட்டு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
2020 ஆம் ஆண்டு கொரோனா தலைதூக்கியது முதல், சீனா, வட கொரியா போன்ற நாடுகள் கொரோனா பாதிப்பு மற்றும் இறப்பு எண்ணிக்கைகளை உண்மைக்கு மாறாக மூடி மறைப்பதாக தகவல்கள் வெளியாகின... அந்த வரிசையில், தற்போது இந்தியாவில் கொரோனா உயிரிழப்புகள் மூடி மறைக்கப்படுவதாக அமெரிக்காவின் டைம்ஸ் நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தி புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. உலகளவில் அமெரிக்காவில் கொரோனாவுக்கு சுமார் 10 லட்சம் பேர் பலியாகியிருப்பதே அதிகபட்சமாக உள்ளது.
இந்தியாவில் இதுவரை ஐந்து லட்சம் பேர் வரை கொரோனாவுக்கு உயிரிழந்ததாக பதிவாகியுள்ள நிலையில், இந்தியாவில் 40 லட்சம் பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு கணக்கிட்டிருப்பது தான் இந்த சர்ச்சைக்கு காரணம். ஆனால் இதனை திட்டவட்டமாக மறுத்துள்ள இந்தியா, கொரோனா இறப்பு விகிதத்தை, வயது பாலினம் அடிப்படையில் கோஸ்டா ரிகா, இஸ்ரேல், பராகுவே, துனிசியா போன்ற நாடுகளில் கணக்கிடுவது போல் இந்தியாவிற்கும் கணக்கிடுவதா? என கேள்வி எழுப்பியுள்ளது.
மக்கள் தொகை அதிகம் கொண்ட இந்தியாவில் அந்த முறைப்படி கணக்கிடுவது சரியானதாக இருக்காது என்றும் மறுத்துள்ளது. மேலும், இந்தியாவில் உள்ள 18 மாநிலங்களிடம் இருந்து உறுதி செய்யப்படாத தகவல்களை பெற்று கொண்டு, இந்தியாவின் கொரோனா உயிரிழப்பு குறித்து கணிப்பது குறித்தும் கேள்வி எழுப்பியுள்ளது. இந்தியாவுடன் சேர்த்து சீனா, வங்க தேசம், ஈரான், சிரியா போன்ற நாடுகளும் உலக சுகாதார அமைப்பின் கொரோனா உயிரிழப்புகளை கணக்கிடும் முறைக்கு தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளன.
இதோடு, இந்தியாவில் கொரோனா உயிரிழப்பு உண்மைக்கு மாறாக அதிகம் என கூறும் நியூயார்க் டைம்ஸ் நாளிதழ், மற்ற நாடுகளின் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கைகளை கணக்கிட முடியாதது தங்களுக்கு ஆச்சரியமாக இருப்பதாகவும் இந்தியா விமர்சித்துள்ளது.
இதற்கு முன்பும் இதே போல் இங்கிலாந்தை சேர்ந்த மருத்துவ இதழான தி லான்செட், இந்தியாவில் பதிவான கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை அறிவிக்கப்படுவதை விட அதிகம் என கூறியிருந்தது. அதற்கும் இந்தியா மறுப்பு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Next Story