நடிகர் விவேக்கின் முதலாம் ஆண்டு நினைவு தினம்... வித்தியாசமான முறையில் கிராம மக்கள் மரியாதை

நடிகர் விவேக்கின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவரது சொந்த ஊரில், விவேக்கின் குடும்பத்தினர் மற்றும் கிராம மக்கள் மரக்கன்று வைத்து மரியாதை செலுத்தினர்.
x
நடிகர் விவேக்கின் முதலாம் ஆண்டு நினைவு தினம்... வித்தியாசமான முறையில் கிராம மக்கள் மரியாதை

நடிகர் விவேக்கின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு சங்கரன்கோவில் அருகே அவரது சொந்த ஊரில், விவேக்கின் குடும்பத்தினர் மற்றும் கிராம மக்கள் மரக்கன்று வைத்து மரியாதை செலுத்தினர். பெருங்கோட்டூர் கிராமத்தில் உள்ள குடும்ப கல்லறையில் விவேக்கின் அஸ்தி வைக்கப்பட்ட இடத்தில் விவேக்கின் குடும்பத்தினர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். தொடர்ந்து அவரது உருவப் படத்தின் முன்பு மரக்கன்றுகள் வைத்து மலர்கள் தூவி இளைஞர்கள் உட்பட ஏராளமானோர் மரியாதை செய்து நடிகர் விவேக்கை நினைவு கூர்ந்தனர்.

Next Story

மேலும் செய்திகள்