"தமிழகம் மாமியார் வீடு, ஆந்திரா தாய் வீடு" - அமைச்சர் ரோஜா அசத்தல் பேட்டி

ஆந்திராவில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வென்ற நடிகை ரோஜா, தற்போது அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
x
"தமிழகம் மாமியார் வீடு, ஆந்திரா தாய் வீடு" - அமைச்சர் ரோஜா அசத்தல் பேட்டி

ஆந்திர மாநிலத்தில் அமைச்சராக பொறுப்பேற்றுள்ள நடிகை ரோஜா காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.

ஆந்திராவில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வென்ற நடிகை ரோஜா, தற்போது அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்தநிலையில் அமைச்சரானதும் முதல்முறையாக காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலுக்கு வந்த ரோஜா, அம்மனுக்கு குங்கும அர்ச்சனை செய்தார்.

இதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்,தமிழகம் தனக்கு மாமியார் வீடு போன்றது எனவும், தமிழகத்திற்கு நல்ல பெயர் கிடைக்கும் வகையில் உழைப்பேன் எனவும் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்