அம்பேத்கருடன் - மோடியை ஒப்பிட்ட இளையராஜா ! - என்ன சொன்னார் ?

BLUEKRAFT DIGITAL FOUNDATION என்ற அமைப்பு அம்பேத்கரும், மோடியும் என்ற தலைப்பில் புத்தகத்தை வெளியிட்டுள்ளது.
x
அம்பேத்கருடன் - மோடியை ஒப்பிட்ட இளையராஜா ! - என்ன சொன்னார் ?

அம்பேத்கரின் சிந்தனைகளை பிரதமர் மோடி செயல்படுத்தி வருவதாக இசையமைப்பாளர் இளையராஜா புகழாரம் சூட்டியுள்ளார்.

BLUEKRAFT DIGITAL FOUNDATION என்ற அமைப்பு அம்பேத்கரும், மோடியும் என்ற தலைப்பில் புத்தகத்தை வெளியிட்டுள்ளது.

இந்த புத்தகத்திற்கு முன்னுரை எழுதியுள்ள இளையராஜா, இந்தியாவில் நடைமுறைப்படுத்தப்படும் நீர் திட்டங்களுக்கு முன்னோடியே அம்பேத்கர் தான் என பிரதமர் மோடி கூறியதை எண்ணி ஆச்சரியப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

 தொழில்மயமாக்கல் முதல் மகளிருக்கான உரிமைகள் வரை அம்பேத்கரின் சிந்தனைகளை பிரதமர் மோடி நிலைநாட்டி வருவதாக குறிப்பிட்டுள்ள இளையராஜா, அம்பேத்கரின் சிந்தனைகளை செயல்படுத்துவோரையும் நாம் போற்ற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

 முத்தலாக் தடை சட்டத்தால் பெண்களின் வாழ்வில் ஏற்படுத்தியுள்ள மாற்றத்தை கண்டு அம்பேத்கரே மோடியை நினைத்து பெருமைக்கொள்வார் என புகழ்ந்துள்ள இளையராஜா, அம்பேத்கரும், மோடியும் இந்தியா பற்றி பெரிதாக கனவு கண்டவர்கள் என்றும், செயலில் நம்பிக்கை கொண்டவர்கள் என முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்