குரான் வாசகத்துடன் தொடங்கிய கோவில் விழா... தர்காவிற்கு சென்ற கரகம் - இதுதான் இந்தியா...!
ஹிஜாப் உள்ளிட்ட விவகாரங்களால், கர்நாடகாவில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக மதரீதியான சர்ச்சைகள் நீடித்து வந்தன.
குரான் வாசகத்துடன் தொடங்கிய கோவில் விழா... தர்காவிற்கு சென்ற கரகம் - இதுதான் இந்தியா...!
திருக்குரான் வாசகங்களுடன் தொடங்கிய இந்து கோவில் திருவிழா மற்றும் தர்காவிற்கு சென்ற கரகம் என, கர்நாடகாவில் நிகழ்ந்த சுவாரஸ்யமான சம்பவம் பொதுமக்களை திரும்பி பார்க்க வைத்துள்ளது.
ஹிஜாப் உள்ளிட்ட விவகாரங்களால், கர்நாடகாவில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக மதரீதியான சர்ச்சைகள் நீடித்து வந்தன. இந்நிலையில், ஹாசன் மாவட்டத்தல் உள்ள பேலூரில், சென்னகேசவா கோயிலில், தேர்த் திருவிழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பாரம்பரியமாக நடைபெற்று வரும் இக்கோவில் திருவிழாவின்போது, தேர் புறப்படுவதற்கு முன்பாக, இஸ்லாமியர்களின் புனித நுாலான திருக்குரானில் இருந்து சில வாசகங்கள் ஓதப்படுவது வழக்கம். அதன்படி இஸ்லாமிய மத குருவான காஜி சையது சஜீத் பாஷா என்பவர், குரானில் இருந்த வாசகங்களை ஓதினார். மேலும், கோவிலுக்கு அருகில் உள்ள ஒரு தர்காவுக்கு கரகமும் எடுத்துச் செல்லப்பட்டது. இந்த நிகழ்விற்கு சில இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். எனினும், கோவில் நிர்வாகிகளும், பக்தர்களும் அவற்றை பொருட்படுத்தாமல், பாரம்பரிய முறைப்படி, அனைத்து சடங்குகளையும் செய்தனர். 'திருக்குரான்' ஓதி, கோவில் தேர்த் திருவிழா நடத்தப்பட்ட நிகழ்வு, ஒட்டுமொத்த இந்தியாவின் மத நல்லிணக்கத்திற்கு சான்றாக அமைந்துள்ளது.
Next Story