திருமணம் செய்யாமல் நாட்டு விடுதலைக்காக போராடியவர் சுதந்திர போராட்ட வீரர் எம்.ஏ.ஈஸ்வரன்
இந்திய விடுதலையின் 75 வது ஆண்டை கொண்டாடும் விதமாக, இன்று ஒரு சுதந்திரப் போராட்ட வீரரைப் பற்றி தெரிந்து கொள்வோம்..
திருமணம் செய்யாமல் நாட்டு விடுதலைக்காக போராடியவர் சுதந்திர போராட்ட வீரர் எம்.ஏ.ஈஸ்வரன்
இந்திய விடுதலையின் 75 வது ஆண்டை கொண்டாடும் விதமாக, இன்று ஒரு சுதந்திரப் போராட்ட வீரரைப் பற்றி தெரிந்து கொள்வோம்..
"இளைஞர் சன்மார்க்க சங்கம்" எனும் அமைப்பை, ஈரோட்டில் தோற்றுவித்து நாட்டுப் பற்றை போதித்தவர் எம்.ஏ.ஈஸ்வரன். காந்திஜி எளிய உடையை அணிவதாக முடிவெடுத்த பின்னர், தானும் இந்தியாவிற்கு விடுதலை கிடைக்கும் வரை, திருமணம் செய்ய மாட்டேன் என்றும், காலுக்கு செருப்பு அணிய மாட்டேன் என்றும், உறுதி ஏற்றவர். 1946 ஆம் ஆண்டு, இவர் ஈரோடு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப் பட்டார். பவானிசாகர் அணை இவரின் பெரு முயற்சியால் உருவானதுதான். நாட்டின் விடுதலைக்காகவும், தேச முன்னேற்றத்திற்காகவும் பாடுபட்ட ஈஸ்வரன், 1978 ஆம் ஆண்டு நம்மை விட்டு மறைந்தார்.
Next Story