'பரியேறும் பெருமாள்' பட நடிகரின் புதிய வீட்டை திறந்து வைத்தார் இயக்குநர் மாரி செல்வராஜ்

பரியேறும் பெருமாள் திரைப்பட நடிகரும் நாட்டுப்புற கலைஞருமான தங்கராசுவின் புதிய வீட்டை இயக்குநர் மாரிசெல்வராஜ் திறந்து வைத்தார்.
x
'பரியேறும் பெருமாள்' பட நடிகரின் புதிய வீட்டை திறந்து வைத்தார் இயக்குநர் மாரி செல்வராஜ்

பரியேறும் பெருமாள் திரைப்பட நடிகரும் நாட்டுப்புற கலைஞருமான தங்கராசுவின் புதிய வீட்டை இயக்குநர் மாரிசெல்வராஜ் திறந்து வைத்தார். பரியேறும் பெருமாள் படத்தில் கதாநாயகனுக்கு அப்பா-வாக நடித்து புகழ் பெற்ற தங்கராசுவின் வறுமை நிலையை கருத்தில் கொண்டு, நெல்லை மாவட்ட நிர்வாகம் மற்றும் முற்போக்கு எழுத்தாளர்கள், கலைஞர்கள் சங்கம் புதிய வீடு ஒன்றை கட்டிக் கொடுத்துள்ளது. இந்த புதிய வீட்டின் திறப்பு விழாவில், மாவட்ட ஆட்சியர் விஷ்ணு, இயக்குநர் மாரி செல்வராஜ் ஆகியோர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர். இதுபோல நலிந்த கலைஞர்களுக்கு அனைவரும் உதவ வேண்டும் என்று மாரி செல்வராஜ் கேட்டுக் கொண்டார்.

Next Story

மேலும் செய்திகள்