"வாய்ப்புகளை வீணாக்கி விட கூடாது" - முதல்வர் வேண்டுகோள்
மக்களுடைய கோரிக்கைகளை உடனுக்குடன் கேட்டறிந்து கவுன்சிலர்கள் சரிசெய்ய வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.
மக்களுடைய கோரிக்கைகளை உடனுக்குடன் கேட்டறிந்து கவுன்சிலர்கள் சரிசெய்ய வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.
சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கில் நடைபெற்ற மாநகராட்சி மேயர், துணை மேயர், நகராட்சித் தலைவர்கள் மற்றும் துணைத் தலைவர்களுக்கான நிர்வாகப் பயிற்சி முகாம் நிறைவு விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் பங்கற்றார். நிகழ்ச்சியில் பேசிய அவர், மக்களாட்சி தத்துவதற்கு உள்ளாட்சி பிரதிநிதிகள் தான் நம்பிக்கை என்றார். மக்களுடைய கோரிக்கைகளை உடனுக்குடன் கேட்டறிந்து கவுன்சிலர்கள் சரிசெய்ய வேண்டும் என்ற முதலமைச்சர், கிடைத்திருக்கும் வாய்ப்புகளை உள்ளாட்சி பிரநிதிகள் வீணாக்கி விட கூடாது என அறிவுறுத்தினார். விதிமீறல்கள் ஏற்படாமல் உள்ளாட்சி பிரதிநிதிகள் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். தமிழக அரசுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்றும், பதவியாக இல்லாமல் பொறுப்பாக நினைத்து பணியாற்ற வேண்டும் என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுரை வழங்கினார்.
Next Story