தமிழ்நாடு அரசின் மீது ஈபிஎஸ் குற்றச்சாட்டு!
தமிழ்நாடு அரசின் மீது எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
ஆப்பிள் ஐபோன்களை தயாரிக்கும் பணிகளுக்கான ஒப்பந்தம் கடந்த அதிமுக ஆட்சியிலேயே போடப்பட்டதாகவும், ஆனால் வழக்கம் போல் இதையும் தங்கள் சாதனை போல காட்டிக் கொள்ள திமுக அரசு முயல்வதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக டிவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், கடந்த 2019ம் ஆண்டு தனது தலைமையிலான ஆட்சியில் ஒப்பந்தம் போடப்பட்டு, 2020 ஆம் ஆண்டே பாக்ஸ்கான் நிறுவன ஆப்பிள் நிறுவனம், சென்னையில் உற்பத்தி செய்யும் பணியை துவங்கி விட்டதாக முதல்வர் ஸ்டாலினுக்கு மீண்டும் ஒருமுறை நினைவுபடுத்த விரும்புவதாக தெரிவித்துள்ளார்.
Next Story