"கலங்கரை விளக்கம் முதல் கிண்டி வரை"... சென்னைவாசிகளுக்கான முக்கிய அறிவிப்பு
சென்னை அண்ணா சாலையில் 5 குறுக்கு சாலைகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வண்ணம் தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை உயர்மட்ட சாலை 485 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்படும் என அமைச்சர் எ.வ.வேலு அறிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்ற மானிய கோரிக்கை மீதான விவாதத்தின் போது நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறையின் 18 அறிவிப்புகள் வெளியாகின. இதன் படி, செங்கல்பட்டு நகரத்தை திருச்சி, புதுக்கோட்டை, மானாமதுரை வழியாக தூத்துக்குடி துறைமுகத்துடன் இணைக்கும் துறைமுக சாலையை நான்கு வழிச்சாலையாக அமைக்க விரிவான திட்ட அறிக்கை 4 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தயாரிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
கோயம்புத்தூர், பொள்ளாச்சி, பழனி, காரியாப்பட்டி வழியாக தூத்துக்குடி துறைமுகத்தை இணைக்கும் தொழில்தட துறைமுக சாலையை நான்கு வழிச்சாலையாக அமைக்க விரிவான திட்ட அறிக்கை 4 கோடி ரூபாய் மதிப்பில் தயாரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை அண்ணா சாலையில் 5 குறுக்கு சாலைகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வண்ணம் தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை உயர்மட்ட சாலைகள் 485 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகர பகுதியில் கலங்கரை விளக்கம் முதல் கிண்டி வரை உயர்மட்ட சாலை அமைக்க விரிவான திட்ட அறிக்கை 45 லட்சம் மதிப்பில் மேற்கொள்ளப்படும் என்பது உள்ளிட்ட 18 அறிவிப்புகள் வெளியாகி உள்ளன.
Next Story