"இந்தியாவுக்கே வழிகாட்டும் திராவிட மாடல் ஆட்சி" - முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
சமபந்தி போஜனம் இனி சமத்துவ விருந்து என அழைக்கப்படும் என்று, முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
சமபந்தி போஜனம் இனி சமத்துவ விருந்து என அழைக்கப்படும் என்று, முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
சென்னை தலைமை செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கண்காணிப்புக்குழு கூட்டம் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. அப்போது பேசிய அவர், வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீட்டுத் தொகை அதிகபட்சமாக 12 லட்சம் ரூபாய் வரை வழங்கப்படும் என்றார். மேலும், வன்கொடுமை வழக்குகளை விசாரிக்க கூடுதல் நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என்றும் தெரிவித்தார். ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் செயல்படும் பள்ளிகளில் 123 கோடி ரூபாய் மதிப்பில் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும் என்ற முதலமைச்சர், சமபந்தி போஜனம் இனி சமத்துவ விருந்து என்று பெயர் மாற்றம் செய்யப்படும் என்றும் அறிவித்தார். தமிழகத்தின் திராவிட மாடல் ஆட்சி, இந்தியாவிற்கு வழி காட்டுவதாகவும் முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்தார்.
Next Story