அரசு மருத்துவமனையில் சுகாதாரமற்ற நீர் விநியோகம் - நோய்த் தொற்று அபாயம்
சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில், சுகாதாரமில்லாத கிணற்றில் இருந்து தண்ணீர் எடுத்து, நோயாளிகளின் பயன்பாட்டிற்கு தரப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
அரசு மருத்துவமனையில் சுகாதாரமற்ற நீர் விநியோகம் - நோய்த் தொற்று அபாயம் சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில், சுகாதாரமில்லாத கிணற்றில் இருந்து தண்ணீர் எடுத்து, நோயாளிகளின் பயன்பாட்டிற்கு தரப்படுவதாக புகார் எழுந்துள்ளது. சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில், உள் நோயாளிகள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இங்கு நோயாளிகளின் பயன்பாட்டிற்காக, மெட்ரோ தண்ணீர், குழாய் மூலம் அனுப்பப்படுகிறது. ஒரு சில நேரங்களில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும்போது, மருத்துவமனை வளாகத்தில் உள்ள கிணற்றில் இருந்து, மோட்டார் மூலமாக தண்ணீர் சப்ளை செய்யப்படுவதாக கூறப்படுகிறது. நீர் எடுக்கப்படும் அந்த கிணற்றில், இறந்த நிலையில் புறா மற்றும் தூசிகளால் சுகாதாரமின்றி காணப்படுவதாக கூறப்படுகிறது. இந்த கிணற்றிலிருந்து எடுக்கப்படும் தண்ணீர், மருத்துவமனை வளாகத்தில் உள்ள கடைகளிலும் பயன்படுத்தப்படுவதுடன், உள் நோயாளிகளுக்கும் அளிக்கப்படுகிறது. இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story