இந்தி பேசும் மாநிலங்கள் மட்டும் போதுமா?, இந்திய மாநிலங்கள் வேண்டாமா? - முதல்வர் மு.க.ஸ்டாலின் கேள்வி

இந்தி பேசும் மாநிலங்கள் மட்டும் மத்திய அமைச்சர் அமித்ஷாவுக்கு போதுமா?, இந்திய மாநிலங்கள் வேண்டாமா? என முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
x
இந்தி பேசும் மாநிலங்கள் மட்டும் மத்திய அமைச்சர் அமித்ஷாவுக்கு போதுமா?, இந்திய மாநிலங்கள் வேண்டாமா? என முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகரில், அரசின் நிதிநிலை அறிக்கை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலினுக்கு, சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து, அவருக்கு வெள்ளியிலான செங்கோல் பரிசாக அளிக்கப்பட்டது. தொடர்ந்து பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், இந்தியாவின் முன்மாதிரி மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்குவதே திமுக ஆட்சியின் இலக்கு என்றும், தமிழ்நாடு முதல் மாநிலமாக உருவாக அனைவரும் உழைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். கடந்த 10 ஆண்டுகளாக பாதாளத்தில் கிடந்த தமிழ்நாட்டை, பத்து மாதங்களில் தலைநிமிர வைத்திருப்பதாக அவர் பெருமைபட கூறினார். எல்லாருக்கும் எல்லாம் கிடைப்பதும், கிடைக்க வைப்பதும் தான் திராவிட மாடல் ஆட்சி என்றும், திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்பட்டு வருவதாகவும் ஸ்டாலின் தெரிவித்தார். ​மேலும், இந்தி பேசும் மாநிலங்கள் மட்டும் மத்திய உள்துறை அமித்ஷாவுக்கு போதுமா? இந்திய மாநிலங்கள் வேண்டாமா? என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.


Next Story

மேலும் செய்திகள்