பிரியாணியில் கரப்பான் பூச்சி...சாப்பிடச்சென்ற வாடிக்கையாளர் அதிர்ச்சி

பிரியாணியில் கரப்பான் பூச்சி கிடந்ததை தொடர்ந்து சென்னையில் இயங்கி வந்த பிரபல பிரியாணி நிறுவனத்தை அதிகாரிகள் இழுத்து மூடினர்.அதோடு 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.
x
பிரியாணியில் கரப்பான் பூச்சி கிடந்ததை தொடர்ந்து சென்னையில் இயங்கி வந்த பிரபல பிரியாணி நிறுவனத்தை அதிகாரிகள் இழுத்து மூடினர்.அதோடு 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.

சென்னை பெருங்குடி அருகே பழைய மகாபலிபுரம் சாலையில் இயங்கிவரும் பிரபல பிரியானி உணவகத்தில் பெரும்பாக்கத்தை சேர்ந்த சுரேந்தர் என்பவர் குடும்பத்துடன் உணவு சாப்பிட சென்றுள்ளார். அப்போது அவருக்கு பரிமாறப்பட்ட பிரியாணியில் கரப்பான் பூச்சி கிடந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கும் அருகில் உள்ள போலீஸ் நிலையத்திற்கும் தகவல் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற அதிகாரிகள் பிரியாணியையும், உணவு தயாரிக்கும் கூடத்தையும் ஆய்வு செய்தனர். அப்போது சமையலறை அசுத்தமாக இருந்தது உறுதியானதை தொடர்ந்து உணவகத்தை அதிகாரிகள் இழுத்து மூடினர். மூன்று நாட்களுக்குள் உணவகத்தில் இருக்கும் குறைகளை சரிசெய்து, அதிகாரிகள் ஆய்வுக்கு பின் மீண்டும்  திறக்கலாம் என அப்போது அறிவுறுத்தப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்