20 ஆண்டுகளுக்கு பின் பிறந்த சிம்பன்சி - தாயை பிரியாமல் சேட்டை செய்யும் குரங்கு

வண்டலூர் அண்ணா உயிரியல் பூங்காவில் உள்ள குட்டி சிம்பன்சி, பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.
x
வண்டலூர் அண்ணா உயிரியல் பூங்காவில் உள்ள குட்டி சிம்பன்சி, பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. 

20 ஆண்டுகளாக வண்டலூர் உயிரியல் பூங்காவில் சிம்பன்சி மனித குரங்குகளின் பிறப்பு என்பது எட்டா கனியாக இருந்து வந்தது. இந்நிலையில், சிங்கப்பூர் உயிரியல் பூங்காவில் இருந்து கொண்டு வரப்பட்ட கெளரி - கொம்பி என்ற சிம்பன்சி ஜோடி, 10 மாதங்களுக்கு முன், ஆண் குட்டியை ஈன்றது. ஆதித்யா என்ற பெயரிடப்பட்டுள்ள அந்த குட்டி சிம்பன்சி, தனது தாயை பிரியாமல் சுற்றி வருகிறது. தாய்ப்பால் மட்டுமே குடித்து வந்த ஆதித்யா, தற்போது பழங்களை சாப்பிட தொடங்கியுள்ளது. இந்நிலையில், அது செய்யும் சேட்டைகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. 


Next Story

மேலும் செய்திகள்