தாய்பாசத்தால், 5 ரூபாய்க்கு மதிய உணவு வழங்கி அசத்தல்

தாயின் நினைவாக, 5 ரூபாய்க்கு மதிய உணவு வழங்கும் உணவக உரிமையாளருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
x
தாயின் நினைவாக, 5 ரூபாய்க்கு மதிய உணவு வழங்கும் உணவக உரிமையாளருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. 

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்ன சேலத்தில், உணவகம் நடத்தி வரும் குணசேகரனின் தாயார் சரோஜா, அண்மையில் காலமானார். தாயின் மீது பேரன்பு கொண்ட குணசேகரன், தமது தாயாரின் ஆன்மா சாந்தியடைவதற்காக, தினந்தோறும் 250 பேருக்கு 5 ரூபாய்க்கு மதிய உணவு வழங்கி வருகிறார். சாம்பார், ரசம், தயிர், மோர் ஊறுகாயுடன் வழங்கப்படும் மதிய உணவை, மாணவர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் மனதார சாப்பிட்டுச் செல்கின்றனர். 


Next Story

மேலும் செய்திகள்