"அகில இந்திய பிரச்சனையாக மாறப்போகும் இந்தி" - கி.வீரமணி

இந்தி எதிர்ப்பு அகில இந்திய பிரச்சினையாக மாறப்போவதாக திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார்.
x
இந்தியாவின் ஒருமைப்பாட்டை காக்கவேண்டிய உள்துறை அமைச்சர் போன்றவர்களே, அதற்கு வேட்டு வைப்பதாக, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி குற்றம் சாட்டியுள்ளார். திருவாரூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், வலுக்கட்டாயமாக ஒரு போராட்டத்தை திணித்து கொண்டிருப்பதாக தெரிவித்தார். தமிழ்நாட்டில் மட்டுமே இருந்த இந்தி எதிர்ப்பு, அகில இந்திய பிரச்சினையாக மாறப்போவதாக எச்சரித்த கி.வீரமணி, அமித்ஷா செய்வது புத்திசாலித்தனமல்ல என்றார்.

Next Story

மேலும் செய்திகள்