மதுரையில் எய்ம்ஸ் வருமா, வராதா...? - ராதாகிருஷ்ணன் பதில்
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டாயம் வரும் என, சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் கூறினார்.
திண்டுக்கல்லில், தனியார் மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகளை விரைவுபடுத்த மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்திருப்பதாகவும், எய்ம்ஸ் மருத்துவமனை கட்டாயம் வரும் எனவும் கூறினார்.
Next Story