பொது வினியோகத் திட்டத்தின் கீழ் செறிவூட்டப்பட்ட அரிசியை வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் செய்தியாளர்களிடம் விளக்கினார். அதன் படி உணவு பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் அனைத்து திட்டங்களிலும் செறிவூட்டப்பட்ட அரிசியை வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. 2024 - க்குள் மூன்று கட்டங்களாக அனைத்து திட்டங்களிலும் இதனை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்காக அரசுக்கு ஆண்டுக்கு கூடுதலாக 2 ஆயிரத்து 700 கோடி ரூபாய் செலவு என்றும் அந்த செலவை மத்திய அரசே ஏற்கும் என்றும், தெரிவிக்கப்பட்டுள்ளது.