"நடந்தாய் வாழி காவேரி திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணியில் வாப்காஸ் நிறுவனம்"
அடையாறு சீரமைப்பு உள்ளிட்ட 8 பணிகளுக்கு 180 கோடி மதிப்பில் விரிவான மதிப்பீடுகள் தயாரிக்கப்பட்டு, பரிசீலனையில் இருப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
அடையாறு சீரமைப்பு உள்ளிட்ட 8 பணிகளுக்கு 180 கோடி மதிப்பில் விரிவான மதிப்பீடுகள் தயாரிக்கப்பட்டு, பரிசீலனையில் இருப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
நீர்வளத்துறை கொள்கை விளக்க குறிப்பில், சென்னை ஆறுகள் மறுசீரமைப்பு அறக்கட்டளை நிதி உதவியின் கீழ், 56 குறுகிய கால உபதிட்டங்கள் மூலம் அடையாறு ஆற்றின் தொடக்கம் முதல் முகத்துவாரம் வரை 555 கோடியே 46 லட்சம் மதிப்பில் சீரமைப்பு பணிகள் நடைபெறுவதாக கூறப்பட்டுள்ளது. இதில் நிலை 2 முதல் 6 வரை ஐந்து பணிகள் முடிவுற்றுள்ளதாகவும், நிலை 1 மற்றும் 7 ஆகிய பணிகளுக்கு கடலோர ஒழுங்குமுறை ஆணையத்தின் அனுமதி எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்ட விரிவான வெள்ளத்தணிப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக, அடையாறு ஆறு சீரமைப்பு உள்பட 8 பணிகளுக்கு 180 கோடியே 54 லட்சம் மதிப்பில் விரிவான மதிப்பீடுகள் தயாரிக்கப்பட்டு, சென்னை ஆறுகள் மறுசீரமைப்பு அறக்கட்டளை நிதியின் கீழ் ஒப்புதலுக்காக பரிசீலனையில் இருப்பதாக கொள்கை விளக்க குறிப்பில் கூறப்பட்டுள்ளது. நடந்தாய் வாழி காவேரி திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கை, சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு தயாரிக்கும் பணி வாப்காஸ் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
Next Story